பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒன்று இணைந்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணாமலை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தில் அதிமுக தலைமை புகார் வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை. என்றால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.