டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை வழங்குவதில்லை என கடந்த மாதம் அம்மாநில பாஜக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், ”10, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எரிபொருள் மறுக்கும் திட்டத்தை தொடங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதனை செயல்படுத்த முடியவில்லை. இதனால் முழுமையாக பணியை முடித்த பிறகு, இம்மாத இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார். டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல், சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. இவற்றில் 372 பெட்ரோல் பங்க்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ”இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்பதே எங்களது நோக்கம். ஒரு பெட்ரோல் நிலையத்தில் மட்டும் செயல்படுத்திவிட்டு, மற்ற பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் ஒரு பயனும் இருக்காது. எனவே,அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்ட உடன் இத்திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்படும்” என்றார்.
Read More : பிஜி தீவில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு..!! அலறிய மக்கள்..!!