தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கும் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் இந்த புதிய நடைமுறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் எதிர்வரும் குத்தகை காலத்தின் போது நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.