fbpx

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொடூர தாக்குதல்…! ரூ.50,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கிறது.

மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும்.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமற்று தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முருகன் என்பவருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

இந்தியாவில் 25000 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டம்!... உபர் நிறுவனம் அறிவிப்பு!

Tue Feb 21 , 2023
அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையை தனது வசமாக்கி வருகின்றன. அதனடிப்படையில் […]

You May Like