நாட்டில் புதிதாக 140 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2450 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,891 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக இருக்கிறது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 0.01 % இருக்கிறது நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் 98.81% இதுவரையில் 220.66 கோடி நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது