தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அஜித்தின் முன்னாள் காதலியும் முன்னாள் நடிகையுமான ஹீரா ராஜகோபால், தனது பிரேக் அப் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், அஜித் தனக்கு துரோகம் செய்ததாகவும், ரசிகர்களை வைத்து மிரட்டியதாகவும், தனது பெயரை கெடுத்து அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும், லஞ்சம் கொடுத்து ஊடகங்களை கட்டுப்படுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஹீரா முன் வைத்துள்ளார்.
ஹீரா ராஜகோபாலின் சமீபத்திய வலைப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது., அதில், நடிகர் அஜித் உடனான காதல் மற்றும் பிரேக் அப் குறித்து பதிவிட்டுள்ளார். அஜித்தின் பெயரை நேரடியாக அவர் தவிர்த்திருந்தாலும், அஜித் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாக போலியாகக் கூறி அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தே, அவரை கவனித்துக் கொண்டதாகவும் ஹீரா கூறியுள்ளார்.
திருமணம் பற்றிய அஜித் கூறிய வார்த்தைகளை பதிவிட்டுள்ள அவர், “நான் ஒரு வேலைக்காரியை போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், யாரும் அவளைப் பார்க்க மாட்டார்கள், நான் விரும்பும் யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் அஜித் கூறியது போல் தான் போதைக்கு அடிமையான நபர் இல்லை எனவும், அவரின் துரோகத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் ஹீரா குறிப்பிட்டுள்ளார். அஜித் இன்று பத்ம பூஷண் விருது வாங்க உள்ள நிலையில், ஹீராவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் புயலை கிளப்பி உள்ளது.
#AjithKumar – A Fake Pr made Gentleman is Exposed
— Mʀꜱ.Kᴇᴇʀᴛʜɪ (@MrsKeerthi85) April 28, 2025
A THREADpic.twitter.com/kpuZk6AfUe
காதல் கோட்டை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் – ஹீராவும் நடிகர்களும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் பல படங்களில் ஒன்றாக வேலை செய்தனர். இதனால் அவர்களின் காதல் உறவு மேலும் வலுவானது. இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அஜித் ஹீராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஹீராவின் தாயார் அவர்களின் காதலை ஏற்கவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது. அஜித் – ஹீரா பிரிந்ததற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், 1998 இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
ஆனால் அடுத்த ஆண்டே, அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித் ஷாலினியை காதலிக்க தொடங்கினார். இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர். 1999 ஆம் ஆண்டில், அஜித் ஷாலினிக்கு தன் காதலை புரபோஸ் செய்தார். 2000-ம் ஆண்டு அஜித் – ஷாலினி ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
நடிகர் அஜித் சமீபத்தில் தனது 25வது திருமண ஆண்டு விழாவை தனது மனைவியுடன் கொண்டாடினார், அதன் காட்சிகள் இணையத்தில் வைரலானது. நடிப்பை தாண்டி, பைக், கார் ரேஸிலும் அஜித் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். கார் ரேஸில் பல வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட 24H எண்டூரன்ஸ் ரேஸ் தொடரில் மூன்று வெற்றிகளைப் பெற்றார்.
முன்னதாக 90களின் இறுதியில் ஹீரா உடனான உறவு குறித்து பேசிய அஜித் “நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், நான் அவளை மிகவும் விரும்பினேன், ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது; அவள் இப்போது அதே நபர் அல்ல. உண்மையில், அவள் ஒரு போதைக்கு அடிமையானவள்”. என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.