fbpx

இந்திய வரைபடத்தை காலில் போட்டு மிதிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்..!! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!!

பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அக்‌ஷய் குமார். இவர் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், அக்‌ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோதான் தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்த விளம்பரத்தில் அக்ஷய் குமார், இந்தியா மற்றும் உலக உருண்டையில் நடப்பது போல் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் அக்‌ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார். இந்த வீடியோ வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் வரைபடத்தை அக்‌ஷய் குமார் மிதிக்கும் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Chella

Next Post

நிறுவன வளாகத்திலேயே தூக்கில் தொங்கிய வடமாநில இளைஞர்! காவல்துறை விசாரணை!

Tue Feb 7 , 2023
கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்  பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர்  இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் […]

You May Like