fbpx

37 ஆண்டுகளுக்கு பின் மனைவியை பிரியும் நடிகர் கோவிந்தா.. அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

திரையுலகில் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்வது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு திரைப் பிரபலங்கள் விவாகரத்து செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த கோவிந்தா தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்ய உள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது டைமிங் காமெடிக்கு பிரபலமான கோவிந்தா பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்த கோவிந்தா 37 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த ஜோடி இந்த செய்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றாலும், அவர்கள் தங்கள் உறவில் சவால்களை எதிர்கொண்டதாக தெரிகிறது.

கோவிந்தா – சுனிதாவின் திருமணம் ஒரு கடினமான கட்டத்தை எட்டியதாகத் கூறப்படுகிறது. எனவே அவர்கள் சிறிது காலம் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகர் கோவிந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கோவிந்தாவின் சொத்து மதிப்பு

கோவிந்தாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, அவரது வெற்றிகரமான திரைப்பட வாழ்க்கை, விளம்பரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் உட்பட பல ஆதாரங்களில் இருந்து அவருக்கு வருமானம் வருகிறது.

கோவிந்தாவின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது. அவரது வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதி பிராண்ட் விளம்பரங்களிலிருந்து வருகிறது. அவர் ஒரு விளம்பரத்திற்கு சுமார் ரூ.2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. திரைப்படங்களை பொறுத்தவரை, கோவிந்தா ஒரு படத்திற்கு ரூ.5-6 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது நடிப்புத் தொழிலுக்கு அப்பால், கோவிந்தா மும்பையில் பல சொத்துக்களை வைத்திருக்கிறார். இந்த நடிகருக்கு மும்பையில் இரண்டு அழகான வீடுகள் உள்ளன: ஒன்று ஜூஹுவின் கெடியா பூங்காவிலும் மற்றொன்று மத் தீவிலும் உள்ளது.. இந்த சொத்துக்கள் சுமார் ரூ.16 கோடி மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.

மேலும் கோவிந்தா பல்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்துள்ளார். இதில் இருந்து அவருக்கு கணிசமான வருமானம் வருகிறது. Mercedes Benz GLC, Hyundai Creta, Toyota Fortuner, Ford Endeavor, Mercedes C220D உள்ளிட்ட பல சொகுசு கார்களும் அவரிடம் இருக்கின்றன.

Read More : மராத்தி நடிகையுடன் தொடர்பு.. மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்..? ரசிகர்கள் அதிர்ச்சி..

English Summary

Information about actor Govinda’s net worth has been released.

Rupa

Next Post

கொடூரத்தின் உச்சம்!! 3 வயது சிறுமியை கல்லால் அடித்து, பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்..

Tue Feb 25 , 2025
3 years old girl was sexually abused by 16 years old boy

You May Like