கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த அவருடைய நடிப்புக்கு தற்போது மார்க்கெட்டும் அதிகரித்து இருக்கிறது.
சமீபத்தில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக சொல்லப்பட்டது. பொன்னியின்செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன் சிரேன் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன.