fbpx

இன்று பிறந்த நாள்.. மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஜெயம்ரவி..!! இத யாருமே எதிர்பார்க்கல..

தனது மனைவியுடன் திருமணம் உறவை முடித்துக் கொள்வதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி இன்று விவாகரத்திற்கான மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. ஆனால் ஜெயம் ரவி மற்றும ஆர்த்தி இருதரப்பிலும் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில்  தனது விவாகரத்தை தெரிவிக்கும் வகையில்  நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். 

இன்று ஜெயம் ரவி தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவர். இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி தமிழ் நடிகராக உள்ளார். சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டார். ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more ; எமனாக மாறிய பலூன்.. தொண்டையில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!!

English Summary

Actor Jayam Ravi, who has announced that he is ending his marriage with his wife, has filed for divorce today.

Next Post

சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி தென்படுகிறதா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

Tue Sep 10 , 2024
If we often find hair in our food while eating, astrologers say there are some reasons for it.

You May Like