பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
மனோஜ் பாஜ்பாயின் தாயார் கீதா தேவி, நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அவர் கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்” இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தந்தை ஆர்.கே.பாஜ்பாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது 83வது வயதில் டெல்லியில் காலமானார்.
மனோஜ் பாஜ்பாய், சத்யா, ஷூல், பிஞ்சார், கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் மற்றும் அலிகார் உள்ளிட்ட பல விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வலைத் தொடரில் நடித்ததற்காக ஆசிய அகாடமி கிரியேட்டிவ் விருதுகளில் சிறந்த நடிகர் விருதை வென்றார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா 2021 இல் வெப் சீரிஸில் சிறந்த நடிப்புக்கான (ஆண்) விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.