ஜெயிலர் உட்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
பிரபல இயக்குநர் வசந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் திரை உலகிற்கு இயக்குநரானார். மேலும் மருது, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார், அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரி நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன் “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜோதிடர்களுக்கு எதிராக இவர் பேசியது அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் “நான் கடவுளையே நம்பமாட்டேன்” என்று இவர் கூறிய வார்த்தை பேசு பொருளானது.
57வயதான நடிகர் மாரிமுத்து இன்று காலை தொலைக்காட்சி தொடருக்காக டப்பிங் செய்து கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்டுகிறது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள்,ரசிகர்கள் என் பல இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.