fbpx

Dear பவன் கல்யாண்.. உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு டைம் இல்ல..!! என்னோட பழைய போஸ்ட்ட பாத்துட்டு இருங்க!! – பிரகாஷ் ராஜ் பதிலடி

திருப்பதி லட்டு விவகாரத்தில் சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று பவன் கல்யாண் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். பவன் கல்யாணின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், “மாண்புமிகு துணை முதல்வர் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்” என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.

மேலும், இப்பிரச்னையை ஏன் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார். இதற்கு பவன் கல்யாண், நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடியாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கூறியதாவது: டியர் பவன் கல்யாண் அவர்களே, உங்களது செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தேன். நான் கூறியதை தவறாகப் புரிந்துக்கொண்டு நீங்கள் பேசியது வியப்பாக இருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு உங்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறேன். அதற்குள், எனது பழைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் என்றார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read more ; ’நடோடிகள்’ படத்தில் நடித்த துணை நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

English Summary

Actor Prakash Raj has responded to Andhra Deputy Chief Minister Pawan Kalyan by posting a video

Next Post

அரசு வேலை, பதவி உயர்வு கிடைக்க கடவுளை இப்படி வழிபடுங்கள்..!! இதை மட்டும் மறந்துறாதீங்க..!!

Wed Sep 25 , 2024
வேலை தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிய பரிகாரங்கள், வழிபாட்டினை நம்பிக்கையுடன் செய்து வந்தாலே விரைவில் பிரச்சனைகள் தீரும். அப்படி வேலை தொடர்பான பிரச்சனைகள், தடைகள் நீங்க எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் முழு பலனும் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். படிப்பை முடித்ததும் வேலை கிடைக்க வேண்டும். அடுத்தடுத்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான் அனைவருக்கும் இருக்கும் ஆசை, […]

You May Like