ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்.. கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு உத்தரவு..

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூலை 24 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மணிப்பூர் அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, நேர்மறை விகிதம் மாநிலத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் (அரசு/தனியார்) ஜூலை 24 வரை மூடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.. 15 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,135 ஆக உள்ளன, அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,264ஆக உள்ளது.. பாசிட்டிவிட்டி விகிதம் 15.6 சதவீதமாக இருக்கும் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 2,120 பேர் கோவிட்-19 க்கு பலியாகி உள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,615 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த கொரோனா வைரஸின் எண்ணிக்கை 4,36,52,944 ஆக உள்ளது. எனவே பொது இடங்களில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாநிலங்களில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இதை செய்ய தவறினால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவிற்கு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடும்...!

Wed Jul 13 , 2022
காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும். இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like