fbpx

மணிப்பூர் செல்ல நேரம் இல்லை.. கன்னுக்குட்டியுடன் வீடியோ எடுக்க உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா? – மோடியை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்

பிரதமர் மோடி வசித்து வரும் பிரதமர் இல்லத்தில், பசுமாடு ஒன்று கன்று ஈன்றதாக செய்தி வெளியானது. மேலும், பிரதமர் மோடி அந்தக் கன்றுக்குட்டியுடன் வீடியோ எடுத்து, அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த கன்றுகுட்டிக்கு தீபஜோதி எனப் பெயரிட்டு, அதற்குப் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு தூக்கிக் கொஞ்சும் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், பிரதமர் மோடி, கன்றுக்குட்டியுடன் விளையாடும் காட்சியை பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “மணிப்பூர் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும்போது படப்பிடிப்புக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா?” என்று மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் போதுமான நிதி குவிந்திருக்கும் போதும், இதுபோல் நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த நேரம் கிடைக்கிறது” என கூறியுள்ளார்.

உயிரியல் ரீதியாக பிறக்காத ஒருவர் என்று ஏற்கனவே மோடி பேசியதை தமது பதிவில் அவர் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். அதோடு, இதுபற்றி என்ன தோன்றுகிறது மக்களே என்றும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி இருக்கும் அந்தப் புகைப்படத்தையும், நாகலாந்தின் ஃபெக் மாவட்ட பா.ஜ.க-வின் அறிக்கையையும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்… யாரை முட்டாளாக்குகிறார்கள்” என விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது.

Read more ; ரஜினியின் படத்தை முந்தியதா கோட் திரைப்படம்..? இதுவரை எத்தனை கோடி வசூல்..?

English Summary

Actor Prakashraj, who shared the scene of Prime Minister Modi playing with a calf, questioned Modi whether he did not have time to go to the burning Manipur.

Next Post

தமிழ்நாட்டில் வானிலை மாறுதே..!! 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!! மழை இல்ல..!! இது வேற..!!

Mon Sep 16 , 2024
Chennai and its suburbs will remain partly cloudy for the next 24 hours.

You May Like