fbpx

திரையில் வேட்டையன்.. மாறு வேடத்தில் விஜய்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! படம் வொர்த்தா.. வொர்த் இல்லையா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மனசிலாயோ பாடல் படம் ரிலீஸுக்கு முன்பே செம்ம ஹிட் ஆனது. இந்த நிலையில் இன்று உலகமெங்கும் படம் வெளியான நிலையில் தியேட்டரின் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் ரஜினியின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை ஆர்வத்துடன் ரசித்துப்பார்த்தனர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சியை சென்னை ரோகினி திரையரங்கில் கண்டுகளித்தார். அதேபோல் வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், ரஜினிகாந்தின் மனைவி லதா, ஐஸ்வர்யா, சௌந்தர்யா என அனைவரும் முதல் காட்சியை பார்த்தனர். அதே போல, சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ரஜினி ரசிகர்களுடன் நடிகர் விஜய் வேட்டையன் படத்தை மாறு வேடத்தில் வந்து பார்த்ததாக வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

படத்தை பொறுத்த வரை, அதியன் எனும் கதாபாத்திரத்தில் என்கவுன்ட்டர் செய்யும் ஹண்டராக வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்பத்திலேயே என்கவுன்ட்டர் தவறான செயல் என பாடம் எடுக்கும் நீதிபதி கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் வருகிறார். போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ள நிலையில், பேட்டரி எனும் கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் வரும் காட்சிகள் எல்லாமே ஜாலியாகவும் சீரியஸான கதையில் கொஞ்சம் காமெடியையும் தூவி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்ற நிலையில், இரண்டாம் பாதி ஜவ்வாக இழுப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more ; ரத்தன் டாடா இறுதிச் சடங்கு.. அனைத்து மத பிரதிநிதிகளும் ஒன்று கூடி பிராத்தனை..!!

English Summary

Actor Rajinikanth starrer Vadaiyaan released in theaters today. Directed by Gnanavel, this film stars Manju Warrier opposite Rajini.

Next Post

உடலுறவு வைத்துக் கொள்ளும்போது இதை அனுபவிச்சிருக்கீங்களா..? அப்படினா இது உங்களுக்குத்தான்..!!

Thu Oct 10 , 2024
Symptoms of vaginal stenosis depend on how narrowed the vaginal canal is.

You May Like