தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்..
சென்னையில் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. இது மரியாதை நிமித்தமன சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. அந்த வகையில் ஆகஸ்ட் 3 முதல் 15 வரை அனைவரும் தங்களின் ப்ரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியன் பேரில் பாஜகவினர் உள்ளிட்ட பலரும் தங்களின் புரொஃபைல் பிக்சரை மாற்றி உள்ளனர்.. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் ரஜினி ஆளுநரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.. படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்த ரஜினி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.. இந்த சூழலில் அவர் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது..