பிளஸ்2 பொதுத்தேர்வு..! விடைத்தாள் திருத்தலில் ஆசிரியர்கள் செய்த காரியத்தால் மாணவர்கள் அதிருப்தி..!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அந்த வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று, தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்தபோது, அதில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பிளஸ்2 பொதுத்தேர்வு..! விடைத்தாள் திருத்தலில் ஆசிரியர்கள் செய்த காரியத்தால் மாணவர்கள் அதிருப்தி..!

வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. தேர்வில் குறைவாக மதிப்பெண்களை வழங்கியுள்ளதை மாணவர்கள் கண்டறிந்து சமூகவலைதளங்களில் தங்களது நிலைமையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை கட் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

Sun Jul 17 , 2022
முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். தனக்கு உடற்சோர்வு சற்று இருந்தது என்றும் […]
பிரியா மரணம்..!! சிக்கியது முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்வீட்..!! விளாசும் பாஜக தலைவர்கள்..!!

You May Like