fbpx

“விஜயகாந்த் நடிக்கும் படத்தில், நான் நடிக்க மாட்டேன்” பிரபல ஹீரோ சொன்ன காரணம்..

மதிய உணவின்றி தவிக்கும் பள்ளி மாணவர்கள்..! தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கண்டனம்..!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர் தான் ராமராஜன். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் உள்ள திரையரங்கில் ஓராண்டு ஓடி சாதனைப் படைத்தது. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்ற இவர், பெரும்பாலும் கிராமத்து பின்னணியில் உள்ள படங்களில் நடித்தார். இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஹீரோவான ராமராஜன், கடந்த 2001-ம் ஆண்டு சீறிவரும் காளை படத்தை இயக்கி நடித்தார். பல வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜன், விஜயகாந்துடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். இயக்குனர் வி.அழகப்பன், நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம், ராமராஜனை நாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பூமழை பொழிகிறது என்ற படத்தில் நடிக்குமாறு, வி.அழகப்பன் ராமராஜனுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது வி.அழகப்பன், “ஹீரோயினாக நதியா நடிக்கறாங்க, படத்தில் விஜயகாந்த்தும் நடிக்கிறார்” என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமராஜன், “என்னை நாயகனாக அறிமுகம் செய்த நீங்களே இப்போது 2-வது ஹீரோவாக நடிக்க சொன்னால் எப்படி” என்று கேட்டுள்ளார். இதனால், இயக்குனர் நான் வேறு யாரையாவது நடிக்க வைக்கிறேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து, ராமராஜன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் சுரேஷ் நடித்திருந்தார்.

Read more: வீட்டு வேலைக்கு வந்த 23 வயது இளம்பெண்; ஆசையை அடக்க முடியாமல் 78 முதியவர் செய்த காரியம்..

English Summary

actor ramarajan refused to act with actor vijayakanth

Next Post

"வாழ்ந்தா, அண்ணி கூட மட்டும் தான் வாழுவேன்" அடம்பிடித்த இளம் பெண்; ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த காரியம்..

Tue Jan 7 , 2025
woman who had homosexual relationship with her relative was given poison by the relatives

You May Like