fbpx

விபத்தில் சிக்கிய சரத்குமார் சென்ற கேரவன்.! 13 பேருக்கு காயம்.!

நடிகர் சரத்குமாரின் கேரவன் மீது பேருந்து மோதியதில், பேருந்தில் சென்ற 13 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பதற்றம் அடைய செய்திருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு நடிகர் சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சிலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் சரத்குமாருக்கு கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர் கேரவனில் கோவிலுக்கு வருகை புரிந்தனர். இவர்கள் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த பின்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேரவனை திண்டுக்கலுக்கு அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து திருப்பி சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூர் அருகே இதில் வந்த பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கேரவனில் இருந்த ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary: Actor Sarath Kumar’s caravan met with an accident near Tirupatur. 13 people injured.

Read More: ANDHRA PRADESH| “ஆணுறை மட்டும் தானா இல்லை வயாகராவுமா.”? ஆணுறைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள்.! YSR காங்கிரஸ் கடும் கண்டனம்.!

Next Post

விளையாட்டாக தோண்டிய குழியில் விழுந்து 7 வயது சிறுமி மரணம்.! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.!

Fri Feb 23 , 2024
இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக சென்ற ஃப்ளோரிடா கடற்கரையில், லாடர்டேல்-பை-தி-சீ என்ற இடத்தில் மணலில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் சரிந்து விழுந்தில், இரண்டு குழந்தைகளும் குழியில் மண்ணுக்குள் புதைந்தனர். நான்கு முதல் ஐந்து அடி வரை தோண்டப்பட்டிருந்த அந்த குழியில், சிறுவன் நெஞ்சுவரை புதைக்கப்பட்டதால், சிறுவனை மட்டும் காப்பாற்ற முடிந்தது. ஏழு வயது சிறுமியின் உடல் பாகங்கள் ஏதும் […]

You May Like