விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பின் மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை துவங்கிய இவரது பயணம், அடுத்த சில ஆண்டுகளில், திடீரென சினிமா பக்கமாக திரும்பியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, மான்கராத்தே, வேலைக்காரன் என பல படங்கள், இவரது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் நர்ஸ் வேடத்தில் இவர், கீர்த்தி சுரேஷூடன் நடித்த ‘ரெமோ’ படம், இவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது.
மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.