நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தனது தாய் ஷோபா சந்திரசேகரனுக்காக சாய் பாபா கோவில் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார். அந்த மாதமே விஜய், சென்னை கொரட்டூர் பகுதியில் சாய் பாபா கோவிலை கட்டியிருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய், அவரது தாயார் ஷோபா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. முதலில் இப்புகைப்படம் ஷீரடியில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. கொரட்டூரில் சுமார் 8 கிரவுண்ட் நிலப்பரப்பில் தனது தாய் ஷோபாவுக்காக இந்த கோயிலை விஜய் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா..? படுக்கைக்கு அழைத்த டைரக்டர்..!! ஓபன் டாக்..!!