fbpx

டிசம்பரில் அரசியலுக்கு வருகிறார் நடிகர் விஜய்..? பணிகள் தீவிரம்..!! எதிர்க்கட்சியுடன் கூட்டணி..? உடைத்த முக்கிய புள்ளி..!!

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தான் நடிகர் விஜய் டிசம்பரில் அரசியலுக்கு வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு செக் வைக்கும் வகையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார் என அதிமுக பிரமுகர் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற வாக்குகள், தொகுதியின் 10 முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்பதற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே தான் வரும் 17ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் டிசம்பரில் அரசியலுக்கு வருவார். அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என அதிமுக பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத மேடையில் அதிமுகவை சேர்ந்தவரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மணிகண்டன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணிகளும் ஹாட்ரிக் எடுப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும். காங்கிரஸ் ஹாட்ரிக் தோல்வியடையும். அந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழப்பதோடு பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற உள்ளது.

‘வேண்டும் மோடி, மீண்டும் மோடி’ இதுதான் நடக்கும். மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் இளையதளபதி வரப்போகும். உங்களின் ஆட்டம் க்ளோஸ். அதிமுகவுடன் அவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி ஏற்பட போகிறது என்றார். இந்த வேளையில் நெறியாளர் குறுக்கீட்டு, ”எந்த இளையதளபதி” என்ற கேள்வியை முன்வைக்க மணிகண்டன், ‘இளையதளபதி விஜய் ‘ என கூறினார். இதன்மூலம் மணிகண்டன் நடிகர் விஜய் டிசம்பர் மாதம் அரசியலுக்கு வரப்போகிறார். அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட உள்ளார் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

Chella

Next Post

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்..!! மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

Sat Jun 10 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி […]

You May Like