fbpx

“புதிய சிக்கலில் விஜய் கட்சி.. ‘TVK’ பெயரை பயன்படுத்த முடியாது”! எம் எல் ஏ வேல்முருகன் அதிரடி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் இருந்தன. இந்நிலையில் அவரது கட்சி பெயருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் ‘TVK’ என சுருக்கமாக அழைக்கப்படும் .

இந்நிலையில் ‘TVK’ என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் நடிகர் விஜய் கட்சி ‘TVK’ என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் TVK என்ற பெயரை வணங்காது எனவும் தெரிவித்திருக்கிறார். வேறு பெயர் தேர்வு செய்யும்படி தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் எனவும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Post

எடப்பாடிக்கு பின்னடைவு..!! அதிமுகவில் இருந்து தாவி பாஜகவில் இணைந்த மாஜி எம்எல்ஏக்கள்..!!

Wed Feb 7 , 2024
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த அதிமுக – பாஜக இந்த தேர்தலில் பிரிந்துள்ளது. இதையடுத்து, இரு கட்சிகளும், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க பாஜகவும், அதிமுகவும் முயன்று வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த […]

You May Like