நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விஜய் அரசியல் வருகை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் தொடங்கியுள்ளது குறித்து இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது இந்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.