fbpx

‘இது நம்ம சர்கார்..’ வாக்கு செலுத்த ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!

‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்று இரவு சென்னை வருகிறார். 

லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68-வது படமான இந்த படத்தில் ஜெயராம், பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதற்காக ரஷ்யா சென்ற நடிகர் விஜய் நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக இன்று இரவு சென்னை வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் ஓட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த படக் காட்சிகள் போலவே ஜனநாயக கடமை ஆற்ற ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய்.

இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. படபிடிப்பு முடிந்தவுடன் கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கிய நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத் தக்கது.

Next Post

Bikkini உடையோடு பேருந்தில் ஏறிய பெண்; பார்த்து பதறிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!

Thu Apr 18 , 2024
டெல்லியில் கூட்டம் நிறைந்த பேருந்தில் பெண் ஒருவர்  பிகினி ஆடை என சொல்லப்படும் நீச்சல் உடையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டெல்லி நகரத்தில் கூட்டம் நிரம்பிய பேருந்தில் பெண் ஒருவர் பிகினி ஆடையோடு ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகி சென்றார். அதேபோல அந்தப் பெண்ணின் முன் […]

You May Like