விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் பனையூரில் தொடங்கியது.
விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்த பல்வேறு திட்டங்களை நடிகர் விஜய் வகுத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நடந்தது.
இந்நிலையில் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை பெண்கள் மத்தியிலும் குடும்பங்களின் மத்தியில் கொண்டு செல்வதற்கு குறித்து ஆலோசனை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.