சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஷால்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அதேபோல் நடிகர் விஷாலும் சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளார். இதை கண்ட விஜய் ரசிகர்கள் விஜய்யை காப்பி அடிப்பதாக கூறி வருகின்றனர். ஆரம்பம் முதலே விஷாலுக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ள நிலையில், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
Read More : ‘INDIA’ அணிக்கு ஓட்டு போடுங்க..? பரபரப்பை கிளப்பிய பாஜக நடிகை குஷ்புவின் பதிவு..!!