‘INDIA’ அணிக்கு ஓட்டு போடுங்க..? பரபரப்பை கிளப்பிய பாஜக நடிகை குஷ்புவின் பதிவு..!!

மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகையும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அப்போது அவர் பதிவிட்டிருந்த ஹேஷ்டேக் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதிவில் #Vote4INDIA மற்றும் #VoteFor400Paar என்று கூறியிருந்தார். இதில் #Vote4INDIA என்ற ஹேஸ்டேக்கை கடந்த சில நாட்களாக இந்தியா கூட்டணியினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், குஷ்பு ஏன் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர், உடல்நிலையை காரணம் காட்டி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வராத நிலையில், தற்போது இந்த பதிவு பேசுபொருளாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பதிவிட்டாரா இல்லை… வேறு ஏதேனும் காரணமா என்பதை குஷ்பு தான் விளக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

Read More : ’அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வெச்சிருக்கீங்க’..? கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

Chella

Next Post

அதிர்ச்சி..! இந்தியாவில் 125 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கித் தவிப்பதாக IMD தரவுகள் காட்டுகிறது!

Fri Apr 19 , 2024
ஆந்திரா, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சி மேலும் நீடித்தால், விவசாயம், நீர்வளம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஏறத்தாழ 125 மாவட்டங்களும் வறட்சியால் வாடுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 10, வரையிலான வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, இனி வரும் காலங்களில் வெப்பநிலை மற்றும் வறட்சி அதிகரிக்கும் […]

You May Like