fbpx

குகேஷை நேரில் அழைத்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார்..!! கேக் வெட்டி பரிசளித்த சிவகார்த்திகேயன்..!!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.

மேலும், இப்போட்டியில் வாகை சூடிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளாா். குகேஷுக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசில் தலைவா்களும், பல்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டிற்கு அழைத்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி பரிசாக புத்தகம் ஒன்றை வழங்கியுள்ளார். அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது வீட்டிற்கு அழைத்து வாழ்த்தியுள்ளார். குகேஷுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன், பரிசாக கைக்கடிகாரத்தை வழங்கினார்.

Read More : ’பாலியல் வழக்கு குற்றவாளி திமுகவை சேர்ந்தவரா’..? ’இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’..!! அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி..!!

English Summary

Actors Rajinikanth and Sivakarthikeyan personally called and congratulated Kukesh for winning the World Chess Championship title.

Chella

Next Post

உலகளாவிய காலரா பாதிப்புகளில் ஏமன் முதலிடம்..! WHO தகவல் : நோய் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்னென்ன..?

Thu Dec 26 , 2024
Yemen reports 35% of global cholera cases, says WHO; know the symptoms, causes and preventive measures

You May Like