fbpx

‘பிளஸ் 2 கூட முடிக்கல.. ஆனா பல கோடிக்கு அதிபதி..!!’ அந்த பிரபல நடிகை யார் தெரியுமா..?

பள்ளிப் படிப்பை கூட முடிக்காத நடிகை ஆலியா பட், இன்று பிரபல நடிகையாகவும், பல கோடிக்கு அதிபதியாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் பல நட்சத்திரங்களின் குழந்தைகள், இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையை சேர்ந்தவர் தான் இந்தி நடிகை ஆலியா பட்.  இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், பாலிவுட்டில் கரண் ஜோகரின் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பாராட்டை பெற்ற ஆலியா பட், தற்போது பல விருதுகளை வென்றுள்ளார்.

ஆனால், அவர் 12ஆம் வகுப்பை கூட முடிக்கவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பதற்கு ஆர்வமாக வந்த ஆலியா பட்டுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்ததால், பல படங்களில் நடித்து வருகிறார். கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

ஒரு நட்சத்திரக் குழந்தையாக இருப்பதால், சில நன்மைகளும், சலுகைகளும் இருப்பதாக, நெப்போடிசம் குறித்த கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஆலியா பட, அதற்காக ஏனோதானோ என்றெல்லாம் நடிக்காமல், தனது முழு திறமையையும் வெளிக்காட்டித்தான் இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ரன்பீர் கபூரை மணந்த ஆலியா பட்டுக்கு ராஹா கபூர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஆலியா பட், தொடர்ந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களைப் போலவே, இவர் தயாரிக்கும் திரைப்படங்களும் ஹிட் ஆகின்றன. அதற்கு ஆலியா பட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே காரணம். விலையுயர்ந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்துள்ள ஆலியா பட், பல தொழில்களையும் செய்து வருகிறார். இதனால், இவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 

Read more ; சவால் விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!! எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் #GoBackStalin..!!

English Summary

Actress Alia Bhatt, who did not even complete her schooling, is today a popular actress and a multi-crore billionaire.

Next Post

ஜூலை 22ஆம் தேதி மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல்..? என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்..?

Sat Jun 15 , 2024
It has been reported that the Union Budget for the financial year 2024-25 will be presented on July 22.

You May Like