2021இல் வெளியான ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தான் தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரை சீரியல்களிளும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதையடுத்து 21ஆம் நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த இவர், தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
இதையடுத்து, இவர் தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் தனது புதிய படங்கள் குறித்து பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல், அவர் தான் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை தர்ஷா குப்தா கூறும்போது, “தூத்துக்குடியில் உள்ள பிரத்யங்கரா கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் போறதுக்கு முன்னாடியே நிறைய ஆன்மிக பயணம் செய்திருக்கேன். இப்போ மறுபடியும் போறேன். இந்த கோயிலில் தரிசனம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த யாகத்தில் கலந்து கொண்டேன்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நான், மேலும் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். தற்போது தமிழில் நடிப்பதற்கு கதைகள் கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையில் நடிக்க தான் விருப்பம். பீட்சா படம் முதல் நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை. அதனால் அவரை பார்த்ததே எனக்கு மகிழ்ச்சி.
தளபதி விஜய் அடுத்த சிஎம் ஆவாருன்னு எதிர்பார்ப்போட காத்திட்டு இருக்கேன். என்னயை கட்சியில் சேருமாறு கூப்பிட்டால் கண்டிப்பாக நான் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன். பதிவி கிடைத்தால் நல்லது தான்” என்றார்.
Read more: 10 வயது சிறுவன் மீது ஏற்பட்ட ஆசை; தனி அறைக்கு அழைத்து சென்று, ஆசிரியை செய்த காரியம்..