தெலுங்கில் பிரபலமாக உலா வரும் நடிகைகளில் ஹம்சா நந்தினியும் ஒருவர். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படமான ருத்ரமாதேவி மற்றும் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதிலிருந்து விடுபட அறுவைச் சிகிச்சை மற்றும் 9 முறை கீமோ சிகிச்சைப் பெற்றும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது புற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளார். சென்ற வியாழக்கிழமை அன்று தனது 38 வது பிறந்த நாளை சினிமா படப்பிடிப்பு பகுதியில் கொண்டாடிய அவர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது ‘நான் மீண்டும் வந்துவிட்டேன் என்றும், இப்போது நான் மறுபிறவி எடுத்தது போல் உணர்கிறேன். இவையெல்லாம் உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை என்று கூறி கொண்டு அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்’ என்று தெரிவித்துள்ளார் .