fbpx

அட்ஜஸ்ட்மென்ட்-க்கு ‘NO’ சொன்னதுனால மூன்று படங்களில் இருந்து தூக்கி விட்டார்கள்..!! – நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கஸ்தூரி பேசுகையில், இப்போதுதான் மலையாளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஏழு வருடங்களாக விசாரணை செய்து இப்போதுதான் அவர்கள் இதை சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு விஷயம் இந்த மாதிரி பிரச்சனைகள் பற்றி வெளியே சொல்லும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஏற்கனவே பாடகி சின்மயிக்கு நடந்ததை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சின்மயிக்கு சுத்தமா பிழைப்பே இல்லாமல் செய்து விட்டார்கள். சினிமா என்பது அதிக உழைப்பை கூறக்கூடிய வேலை. சினிமாவில் வெயிலில் தான் வேலை செய்ய வேண்டும். இருட்டில் வேலை செய்ய முடியாது. இருட்டில் வேலை செய்யக்கூடிய படமாக இருந்தால் அது வேறு படமாக மாறிவிடும். ஆகையால் எல்லா இடங்களிலும் வசதி குறைபாடு உள்ளிட்ட சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்கு தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்டும் செய்யாமல் பெரிய ஆளாக வந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நடிகைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் உறுதியை நம்பி தங்களுடைய உடலை படுக்கைக்காக கொடுக்கிறார்கள். ஆனால் அதில் ஏமாந்து போய்விடுகிறார்கள். ஆனாலும் இன்னொரு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஏமாந்து மீண்டும் மீண்டும் படுக்கையில் பகிர்கிறார்கள்.

இதில் சில பேருக்கு அது ஒர்க் அவுட் ஆகலாம். பல பேருக்கு அது ஒர்க் அவுட் ஆகாமலும் போகலாம். எனக்கு தெரிஞ்சு ஒரு பிரபல டைரக்டர் இருக்கிறார். கதாநாயகிக்கு டேக் ஓகே செய்யவே மாட்டார். முதல் நாள் முழுக்க ரீடேக்கு கொடுத்து அந்த நடிகையை பாடாய்படுத்தி எடுத்து விடுவார். ஆனால் மூன்றாவது நாள் வரும்போது அவர் முதல் டேக்கிலேயே ஓகே என்று அந்த கதாநாயகியை தேர்வு செய்து விடுவார்.

இது அங்கு இருக்கும் எல்லோருக்கும் அவர் எதனால் இப்படி நடந்து கொள்கிறார். ஆனால் எல்லாரையும் அந்த டைரக்டர் போல இருப்பாங்க என்று சொல்லவும் முடியாது. அதுபோல எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் நடந்திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் நடந்து இருக்கிறது. அதற்காக என்னை ஒரு படத்தில் இருந்து தூக்கி இருக்கிறார்கள். டைரக்டரோட நான் படுக்கையை பகிரவில்லை என்று என்னை கிட்டத்தட்ட மூன்று படங்களில் இருந்து தூக்கி விட்டார்கள்.

அதுபோல ஹீரோவுடன் ஒத்துப்போக முடியாது என்று நானே ஒரு படத்திலிருந்து விலகி விட்டேன். அதுபோல இன்னொரு படத்தை முடித்துவிட்டு அந்த நடிகரோட நடிக்கவே மாட்டேன் என்றும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன். இப்படி சினிமா உலகத்தில் வெளியே தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இதே பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.

Read more ; ஆகஸ்ட் 31 & செப்டம்பர் 1-ம்… சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

English Summary

Actress Kasthuri has given an interview to a youtube channel about what happened to her due to the adjustment problem.

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கைதான வழக்கறிஞர்களுக்கு செக்..!! பார் கவுன்சில் அதிரடி

Fri Aug 30 , 2024
The Bar Council of Tamil Nadu and Puducherry has ordered to bar the 4 lawyers arrested in the murder case of Bahujan Samaj Party state president Armstrong.

You May Like