மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டு நாட்களாக இந்த அறிக்கையின் முடிவுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வறிக்கையின் படி, முக்கிய குற்றவாளிகளாக கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அறியப்பட்டுள்ளனர். அத்துடன் ஜெயலலிதாவின் இறப்பு தேதி டிசம்பர் 4 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து பல பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பிரபல நடிகையும் அரசியல் விமர்சகர்மான கஸ்தூரி ஒரு பதிவிட்ட்டுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி ஒரு பதிவை மேற்க்கோள் காட்டி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் நான்காம் தேதியே நான் இதை பதிவு செய்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சில அழுத்தங்களின் காரணமாக அந்த பதிவை நான் டெலிட் செய்து விட்டேன். ஆனால் பேஸ்புக் லிங்க் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஆறுமுகசாமி ஆணையம் இறுதி பக்கத்தில் வெளியிட்ட திருக்குரளையும் அவர் பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.