கவர்ச்சியான உடைகளும், கதாப்பாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர் தான் நடிகை மும்தாஜ். 90s கிட்ஸ்களின் விருப்பமான நடிகையும், கவர்ச்சிக்கு பெயர் போனவருமான இவர், தற்போது தலைகீழாக மாறி விட்டார். ஆம், ஆன்மீக வாழ்கையில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் மும்தாஜ், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழா ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார்.
அந்த வகையில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பேசிய போது, “என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னை நிறைய பேர் திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் துவா செய்திருப்பீர்கள். உண்மைதானே?” என கண்ணீர் மல்க கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், “நான் இன்னைக்கு உங்க முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கேன் பாருங்க. இது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுக்குற விஷயம்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், முன்னாடி நான் வெளிய போனா முஸ்லீம் லேடிஸ் எல்லாம் ஒரு மாதிரி பாப்பாங்க. அது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, இன்னைக்கு எனக்கு உங்க அன்பு கிடைக்குது. என் காலத்துல எனக்கு இந்த மாதிரி மதரஸா எல்லாம் இல்ல. எனக்கு சொல்லிக் கொடுக்க யாரும் இல்ல. சின்ன வயசுல 4 பேர் அழகா இருக்கீங்கன்னு சொன்னதுனால தான் நடிகை ஆகலாமான்னு யோசிச்சேன்.
நான் ஜீன்ஸ், மினி ஸ்கட் போட்டு டான்ஸ் ஆடும் போது எல்லாம் கீழ பாப்பாங்க. அது மனசுக்கு கஷ்டமா இருந்தது. அந்த சமயத்துல கொஞ்சம் அன்பா யாராவது சொல்லிருந்தா நான் கொஞ்சம் சீக்கிரம் மாறி இருப்பேன். என்ன கோவமா பாத்தவங்க எல்லாம் இப்போ அன்ப குடுக்குறாங்க. அதுக்கு எல்லாருக்கும் நன்றி” எனக் கூறினார்.