நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமாக உள்ளார்,. அவரது ஆரம்பகால மாடலிங் நாட்களில் இருந்து பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தது வரை, அவரின் புகழ் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அக்டோபர் 13 அன்று அவரது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவரது நிகர மதிப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூஜா ஹெக்டேயின் திரைப்படங்கள் : பூஜா ஹெக்டேவிற்கு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய பூஜாவின் புகைப்படங்களை பார்த்து தான் இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தில் பூஜாவை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவரின் அறிமுகம் நன்றாக இருந்தாலும் படத்தின் தோல்வி ஹீரோயின் பூஜாவின் வளர்ச்சியையும் பாதித்தது.
தமிழ் சினிமா பூஜாவை புறக்கணித்தாலும் தெலுங்கு திரையுலகம் இந்த அழகியை ஆராதித்தது. தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா. முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது.
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் அவரின் நடிப்பு பலரால் பேசப்பட்டது. ‛மலமா பித்தா பித்தாதே ..மலமா பித்தா பித்தாதே.. மலமா பித்தா பித்தாதே..’ என தமிழ் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் அசத்தலான நடனம், காந்தம் போல இழுக்கும் அழகு, அளவான நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர்.
பூஜா ஹெக்டேயின் நிகர மதிப்பு : சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம். இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகி பூஜா ஹெக்டே விளம்பரங்களில் நடிக்க ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் சம்பளம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.
நடிகை பூஜா ஹெக்டேவிற்கு சொந்தமாக மூன்று சொகுசு கார்கள் உள்ளனர். Porsche Cayenne ரூ.2 கோடி , Jaguar ரூ. 60 லட்சம் மற்றும் Audi Q7 ரூ. 80 லட்சம். மேலும் மும்பையில் சமீபத்தில் 3BHK வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பூஜா. இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என தெரிவிக்கின்றனர்.
Read more ; தீபாவளி பரிசாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கார்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை நிறுவனம்..!!