கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷகீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் பிசியாக உள்ளார். குக் வித் கோமாளி மூலம் அம்மா என்று பலரால் அழைக்கப்பட்ட இவர், யூடியூப் மூலமாக பிரபலங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று, தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் தான் திருமணம் செய்துக் கொள்ளாததற்கு காரணத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது, திருமணம் செய்துக் கொண்டு ஒருத்தர் மூஞ்சியையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அதனால் தான் நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். மேலும், சினிமாவின் உச்சத்தில் இருந்த ஷகிலாவின் பணத்தை, அவரது தங்கை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழில் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதாக கூறியிருந்தார். மேலும், கேரவன்கள் இல்லாத காலகட்டத்தில், உடை மாற்ற இடமில்லாமல், மற்றவர்கள் முன்னிலையில் மேலே ஒரு ஆடையை போட்டு உடை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது உள்ள கேரவனில் உடை மாற்றுவது மட்டுமில்லாமல் மற்ற மோசமான விஷயங்களும் நடப்பதாக கூறியுள்ளார்.
Read more: “கல்யாணம் பண்ணா, புருஷன் வீட்ல சமைக்கணும்” விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..