பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டு, கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சௌந்தர்யா. பின்னர் தெலுங்கிலும் நடிக்க துடங்கிய இவர், பல ரசிகர்களின் மனதை வென்றார். மேலும், இவர் 1993ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானார். அதில் இவர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து அவர் தமிழில் காதலா காதலா, அம்மன், தவசி, படையப்பா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். இவர் தனது கரியர் பீக்கில் இருந்த போது, தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின், அரசியலில் நுழைந்த இவர், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கடந்த 2004ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பு இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப், சௌந்தர்யா குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் பேசும் போது, “சௌந்தர்யாவின் தந்தை, கன்னடத்தில் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். சௌந்தர்யாவும் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ளார். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமார் மீது சௌந்தர்யாவுக்கு எப்போதுமே மிகப்பெரிய மரியாதை இருந்தது.
இதனால் அவர் உயிரிழக்கும் பத்து நிமிடத்திற்கு முன்புகூட உதயகுமாரிடம் ஃபோனில் பேசியுள்ளார். போனில் பேசும் போது, அவர் தனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று கூறினார். சௌந்தர்யாவிற்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும், அவர் தனது கணவருக்காக அரசியலில் ஆர்வம் காட்டினார். ஆனால் அவருக்கு அரசியலில் வந்த பிரச்சனைகளை தாங்க முடியவில்லை” என்று கூறினார்.
Read more: வீட்டை விட்டு தனியாக சென்ற சிறுமி; மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…