NRC சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்.சி எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயல் இழக்க செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். வங்காளத்தில் ஆதார் அட்டைகள் திடீரென செயலிழக்கச் செய்யப்பட்டதற்கான காரணங்களை அறிய விரும்புவதாக […]

நடிகர் விஜய்யின் (Actor Vijay), தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைமை நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரிடப்பட்ட அந்தக் கட்சிக்கு, ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். […]

வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி இல்லை என்ற முடிவே நிலவி வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தமிழகத்தில் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்(OPS) பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை […]

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனது இலக்குகளை தெளிவாக நிர்ணயித்திருக்கிறது. மொத்தம் உள்ள 545 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 370 இடங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கட்சியின் இலக்கை […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முக்கிய தலைவர்கள் கட்சி மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் திடீரென […]

2018 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் சட்டங்கள் செல்லாது என அறிவித்தது. நிலையில் தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்தல் தேதி போன்றவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் பம்பரமாக ஈடுபட்டு வருகிறது. […]

பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக 129 பேர் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. மேலும் […]

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன . மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்ற மகா கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி உருவான நாளிலிருந்து பல்வேறு சிக்கல்கள் […]

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆறு வருடங்கள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணமை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் வரம்புகளை மீறி ஒழுங்கின நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 6 வருடங்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை […]