fbpx

நடிகை ஸ்ரீதேவி மரணம்..!! உண்மைகளை மறைத்த அரசு..!! சிபிஐ தாக்கல் செய்த ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் ஓட்டல் குளியலறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி ஆர்.பின்னிதி என்ற பெண், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தார். அப்போது, 2 அரசுகளும் ஸ்ரீதேவி மரண மர்மங்களை மூடி மறைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தான் சொந்தமாக விசாரணை நடத்தி, இதை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் எழுதியதாக சில கடிதங்களையும், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரக ஆவணங்கள் என்ற பெயரில் சில ஆவணங்களையும் வெளியிட்டார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கு மும்பை வக்கீல் சாந்தினி ஷா என்பவர் புகார் அனுப்பினார். பிரதமர் அலுவலகம், அதை சிபிஐ-க்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில், கடந்தாண்டு தீப்தி ஆர்.பின்னிதி, அவருடைய வக்கீல் பாரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தீப்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், தீப்தி ஆர்.பின்னிதி, வக்கீல் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் கடிதங்கள் உள்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த தீப்தி, ”குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது கோர்ட்டில் ஆதாரங்களை அளிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

RIP | தமிழ் சினிமா இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Mon Feb 5 , 2024
’சவுண்ட் பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புது காமெடி ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார். இப்படத்தில் சத்யராஜ், பிரதயுஷா, வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற “குமரேசா எங்க போற… எங்கய்யா போற” என்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். இதுபோன்ற காமெடிக்கு இயக்குனர் ஆர்த்தி குமார் சொந்தக்காரர். தருண் கோபி நடித்த ஞானி உள்ளிட்ட படங்களையும் ஆர்த்தி குமார் […]

You May Like