தொலைக்காட்சி நடிகை வைஷாலி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வில், இந்தூரை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி தக்கர் காலமானார். 29 வயதான நடிகை இந்தூர் வீட்டில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த காரணம் தெரியவில்லை என்றாலும், வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து தேஜாஜி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.