fbpx

பாஜகவில் இருந்து விலகினார் நடிகை விஜயசாந்தி..!! காரணம் இதுதானாம்..!!

தெலங்கானா மாநிலத்தில் பாஜகவில் இருந்து சில முக்கியத் தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வகையில், நடிகை விஜயசாந்தி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் தொலைபேசி மூலம் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால் ரெட்டி, முன்னாள் எம்பி விவேக் வெங்கடசாமி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் விலகினர். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Chella

Next Post

72 வயது தந்தையை கோடாரியால் அடித்தே கொன்ற மகன்..! வெளியான பகீர் உண்மை.!

Thu Nov 16 , 2023
குடும்பத் தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இலங்கையின் ஓபநாயக்க பிரதேசத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 12ம் தேதி மதியம் கணவன் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த மகன் கோடாரியால் தனது தந்தையை கடுமையாக தாக்கி […]

You May Like