fbpx

”பணத்திற்காக நடிகை விந்தியா செய்யும் காரியம்”..!! ரகசியத்தை புட்டு வைத்த பயில்வான்..!!

நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித், தனுஷ், வடிவேலு போன்ற நடிகர்கள் குறித்தும், த்ரிஷா, நயன்தாரா தொடங்கி கீர்த்தி பாண்டியன், ரேகா நாயர் என பல நடிகைகள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்.

சில பிரபலங்கள் இவரின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றாலும் சிலர் நேரடியாகவே அவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். அந்த வகையில், நடிகை ரேகா நாயர் ஒருமுறை நேரடியாகவே பயில்வான் ரங்கநாதனிடம் சண்டைக்கு சென்றுவிட்டார். மேலும், பயில்வான் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓப்பனாகவே கூறியிருந்தார். ஆனால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசுவதை பயில்வான் நிறுத்தவே இல்லை.

அந்த வகையில், தற்போது சங்கமம் பட நடிகையை பற்றி பேசி உள்ளார் பயில்வான் ரங்கநாதன். யூடியூப் சேனல் ஒன்றில் விந்தியா குறித்து பேசியுள்ள அவர், “பல நடிகைகள் அரசியல் கட்சிக்கு வந்து ஒவ்வொரு கட்சியாக மாறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை விந்தியா அரசியல்வாதி போல் பேசாமல் ஏதேதோ உளறி வருகிறார்.

விந்தியா பானுப்பிரியாவின் அண்ணன் கோபால கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் 2012ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். தொடர்ந்து விந்தியா தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். விந்தியாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ.25,000 கொடுக்கப்படுகிறது. அந்த பணத்திற்காக விந்தியா இப்படி பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.

நடிகை விந்தியாவுக்கு சினிமாவில் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் அரசியலில் இறங்கிவிட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த விந்தியா, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். அதன்படி 2006, 2011, 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2014 மக்களவை தேர்தல் என பல தேர்தல்களில் விந்தியா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விந்தியா அதிமுகவுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ”இதெல்லாம் என்ன மாதிரியான திராவிட மாடல்”..!! முதல்வர் முக.ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

Chella

Next Post

’விவாகரத்தான பெண்களுக்கு செக்..!! முன்னாள் கணவர்கள் நிம்மதி’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Wed Apr 10 , 2024
விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. […]

You May Like