fbpx

’அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்’..!! அவதூறாக பேசிய மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்தது வழக்கு..!!

நடிகைகள் குறித்து இழிவாக பேசியதாக மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் நிவின் பாலி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக சில நடிகைகள் கூறினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், ”படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகைகள் புகாரளிக்கின்றனர். மேலும், நடிகைகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவரான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில் ஆன்லைன் வழியாக புகாரளித்தார்.

அந்த புகாரில், ”டாக்டர் காந்தராஜ் நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசியுள்ளார். மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருக்கிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை ரோகினியின் புகாரின் பேரில், மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read More : 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

English Summary

The Chennai Central Crime Branch has registered a case under 5 sections against Dr. Kandaraj for defaming actresses.

Chella

Next Post

'இவர்களால் ஆபத்து' சூனியகாரர்கள் 5 பேரை கற்களை வீசி அடித்துக் கொன்ற கிராம மக்கள்..!! பகீர் சம்பவம்..

Mon Sep 16 , 2024
Chhattisgarh: 3 Women Among 5 Killed Over Suspicion Of Witchcraft In Sukma, 5 Detained

You May Like