fbpx

அதானி நிறுவன கடன் விவரங்கள்..!! முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக கடுமையாக சரிந்தன. அதானி குழுமம் பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. பல்வேறு கடன்களை அடைத்து முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அதானி குழுமம் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஏப்ரல் 2025 முதிர்வுத் தேதிக்கு முன், ரூ.7,374 கோடி ஈக்விட்டி-பேக்டட் ஃபைனான்சிங் நிலுவை தொகைகளை செலுத்தும் என்று அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் அண்மையில் ரூ.15,446 கோடி முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவை உறுப்பினர் தீபக் பாய்ஜ் முன்பே கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதிலளித்துள்ளார். அந்த பதிலில், ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகன்..!! சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற தாய்..!!

Mon Mar 13 , 2023
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவருக்கும் ஹூசேனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ரெஹான் மற்றும் ஆர்யன் என்ற ஆண் குழந்தைகள் இருந்தன. தம்பதிக்கு இடையே தொடர் சண்டைகள் ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு 2 குழந்தைகளும் இடையூறாக இருந்து […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகன்..!! சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற தாய்..!!

You May Like