பொதுவாக பலரும் பால் மற்றும் தயிர் அதிகமாக உட்கொள்வதற்கு அதில் இருக்கும் கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதே முக்கிய காரணம். இவை நம் உடலை பலப்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குகிறது. கோடையில் தயிர் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதனால் மதிய உணவு தயிர் இல்லாமல் இருக்காது. அப்படி நீங்கள் வெயிலை சமாளிக்க தயிரை உட்கொள்கிறீர்கள் என்றால், அதில் சில பொருட்களைக் கலந்து சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும்.
தயிர் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், தயிர் சாப்பிடும் போது சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிட அதன் நன்மைகளை இரட்டிப்பாகப் பெறலாம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சீரகம் :
ஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபட சீரகத்தை தயிருடன் கலந்து சாப்பிடலாம். இதனால், உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, உணவு எளிதில் செரிமானமாகும். வறுத்த சீரகம் மற்றும் உப்பை தயிரில் கலந்து சாப்பிட்டால் பசி அதிகரிக்கும் மற்றும் உற்சாகமாக இருக்கும். சீரகத்தை பொடியாகவும் கலந்து சாப்பிடலாம்.ச்
உலர் பழங்கள் :
உலர் பழங்களை தயிரில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் அதை இரட்டிப்பான சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றலாம். தயிர் சாப்பிடும் போது அதில் முந்திரி, பாதாம் மற்றும் வால்நட்ஸையும் சேர்க்கலாம். இது தயிரின் சுவையை அதிகரிப்பதோடு நினைவாற்றலை கூர்மையாக்கும். அதுமட்டுமின்றி, தயிர் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது.
வெல்லத்துடன் தயிர் :
தயிருடன் வெல்லம் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மறுபுறம், தயிர் மற்றும் வெல்லம் சாப்பிடுவது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதனால், இரத்த சோகையை நிறைவு செய்கிறது மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. மறுபுறம், தயிர் மற்றும் வெல்லம் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற தொந்தரவுகளையும் சரி செய்கிறது.
திராட்சை :
திராட்சையில் புரதம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. தயிர் மற்றும் திராட்சையை ஒன்று சேர கலந்து சாப்பிடுவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கும். அதே சமயம், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு சக்தியை அதிகரிக்கும்.