fbpx

டீசல் கார்களுக்கு கூடுதலாக 10% வரி..? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்..!!

நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. மேலும், டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதாகவும், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளர். தனது எக்ஸ் தளத்தில், நிதின் கட்கரி கூறியுள்ளதாவது, “டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க மத்திய அரசு முன்மொழியவில்லை. 2070ஆம் ஆண்டுக்கு கார்பன் வெளியீட்டு அளவு நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருள்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், செலவு குறைவானதாகவும் மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்“ என்று தெரிவித்தார்.

Chella

Next Post

மீண்டும் பரவும் நிபா வைரஸ்..!! இருவர் மரணம்..!! சுகாதாரத்துறை அலெர்ட்..!! பீதியில் மக்கள்..!!

Tue Sep 12 , 2023
கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், அவர்கள் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் 75 பேரை கண்காணித்து வருவதாகவும் என்றும் அவர்களுக்கு சோதனை […]

You May Like