fbpx

அடேங்கப்பா..!! பாஜகவின் வங்கிக் கணக்கில் ரூ.7,113 கோடி..!! தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல்..!!

இந்தியாவின் பாஜகவின் வங்கிக் கணக்கில் ரூ.7,113 கோடி சொத்து இருப்பதாக கணக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு கட்சியும் ஆண்டு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும். அந்த வகையில், தற்போது பாஜக, தனது சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, பாஜக தாக்கல் செய்த கணக்கில் மார்ச் 31, 2024 வரை ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய அளவில் பாஜக பணக்கார கட்சியாக உள்ளது.

மேலும், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-2024ம் ஆண்டில் பாஜக அதிக நன்கொடையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக 2022-2023ல் ரூ.2,120.06 கோடியையும், 2023-2024ம் ஆண்டில் ரூ.3,967.14 கோடியையும் நன்கொடையாக பெற்றுள்ளது. இது 87% உயர்வாகும். மொத்த நிதியில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 43% நன்கொடையை பெற்றுள்ளது. அதாவது ரூ.1,685.62 கோடியை பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

அதேபோல், 2022-2023ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171.02 கோடியை காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், 2023-2024ஆம் ஆண்டில் இந்த நன்கொடை ரூ. 828.36 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 73% அதிகமாகும். 2022-2023ஆம் ஆண்டில் ரூ.192.55 கோடியை செலவு செய்த காங்கிரஸ், 2023-2024ஆம் ஆண்டு ரூ.619.67 கோடியை வாரி இறைத்துள்ளது.

Read More : பிரபல ரவுடியை பைக்கில் சுற்றி வளைத்த கும்பல்..!! ஓட ஓட விரட்டி படுகொலை..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

The BJP of India has filed an account showing assets of Rs 7,113 crore in its bank account.

Chella

Next Post

ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.. தலித்களை அபகரிக்கும் சூழ்ச்சி இது..!! - திருமாவளவன் பதிலடி

Tue Jan 28 , 2025
A Scheduled Caste Chief Minister in Tamil Nadu The governor's speech of want is a ploy to grab Dalit votes!- Thirumavalavan

You May Like