fbpx

வங்காளத்தில் அடினோ வைரஸ் பீதி: கொல்கத்தாவில் சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை; அறிகுறிகளும்! சிகிச்சை முறைகளும்!

மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் டெங்குவுக்குப் பிறகு அடினோ வைரஸ், மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திவருகிறது. தற்போதைய குளிர்காலத்தில், மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே, அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, கொல்கத்தாவில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளுக்கு கூட, இந்த அடினோ வைரஸ் ஒரு “தீவிரமான, உயிருக்கு ஆபத்தான” நிலையாக இருக்கலாம் என்று கூறுகிறது. அடினோ வைரஸ்கள் பொதுவாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொடுதல் அல்லது கைகுலுக்குதல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றின் மூலம் காற்றில் பரவும் என்று தெரிவித்துள்ளது.

அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த பொருள்கள் மற்றும் அவர்களின் முகங்களை தொடுவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. குழந்தைகள் உபயோகித்த டயப்பர் மூலமாகவும் ஒரு நபரின் சிறுநீர் வழியாகவும் பரவலாம். மேலும், நீச்சல் குளங்கள் போன்ற நீர்நிலைகள் மூலமாகவும் அடினோ வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, கோவிட் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. மேற்கு வங்கத்தில், பொது தீவிர சிகிச்சை பிரிவில் (PICU)போதுமான படுக்கை மற்றும் வெண்டிலேட்டர்கள் வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்று மருத்துவர் ஆனந்தபஜார் பத்ரிகா தெரிவித்தார்.

அடினோவைரஸ் அறிகுறிகள்: அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) படி, ஏற்கனவே சுவாச அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடினோவைரஸ் விரைவில் தொற்றி கடுமையாக பாதிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இதய நோயாளிகளையும் அடினோ வைரஸ் கடுமையாக தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைப்புண், நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.

அடினோ வைரஸ் சிகிச்சை: அடினோ வைரஸ் தொற்றை தடுப்பதற்கான மருந்துகள் அல்லது முறைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெரும்பாலான அடினோ வைரஸ் நோய்த்தொற்றுகள் சிறியவை, மேலும் அறிகுறிகளை பொதுவாக ஓய்வு மற்றும் ஓவர்-தி-கவுன்டர் வலி நிவாரணிகள் அல்லது காய்ச்சலைக் குறைப்பதன் மூலம் கையாளலாம். அடினோவைரஸ் தடுப்பூசி இருந்தாலும், அது அமெரிக்க ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

உடனே நடவடிக்கை...! போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம்...! நீதிமன்றம் பாராட்டு...!

Tue Feb 21 , 2023
போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசிக்கும் சலபதிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார். போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். போலி […]

You May Like